தேசபந்து தென்னகோன் தலைமறைவு?

தேசபந்து தென்னகோன் தலைமறைவு?

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது.

அவரைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் வீட்டில் சோதனையிட்டபோது முன்னாள் பொலிஸ்மா அதிபர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் முக்கிய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​அவர் தலைமறைவாகியிருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இன்றோ அல்லது நாளையோ அவர் சரணடைவார் என தான் நம்புவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This