நான்காம் கட்ட கடன் – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

நான்காம் கட்ட கடன் – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

மூன்றாவது மதிப்பாய்வின் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதி நான்காவது தவணையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி 1.34 பில்லியனை எட்டியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

சமூக செலவினங்களுக்கான குறியீட்டு இலக்கைத் தவிர, 2024 டிசம்பர் இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

2025 ஜனவரி இறுதிக்குள், பெரும்பாலான கட்டமைப்பு அளவுகோல்கள் சிறிது தாமதத்துடன் பூர்த்தி செய்யப்பட்டன அல்லது செயல்படுத்தப்பட்டதாகவும் அண்மையில் முடிவடைந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கடன் நிலைத்தன்மையை நோக்கிய பயணத்தின் வெற்றிகரமான விளைவாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Share This