இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் – காரணம் என்ன?

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
IATO வின் தலைவர் ராஜீவ் மெஹ்ராவின் கூற்றுப்படி, இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள அழகான தீவாக இருப்பதாலும் கலாச்சார உறவுகள் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டிருப்பதாலும் இந்திய பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாவிற்கு வலுவான சந்தையைக் கொண்டுள்ளது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் கோவா மற்றும் சிக்கிமுக்குள் மட்டுப்படுத்தப்படுகிறார்கள். இலங்கை கேசினோ போன்ற விளையாட்டுகள் ஆரம்பமான பின்னர் இந்திய பயணிகள் அதிகமாக இலங்கைக்கு வருகை தருவார்கள்.
இந்தியா இலங்கையின் மிகப்பெரிய மூல சந்தையாகும். 2024ஆம் ஆண்டில் 416,974 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக கேசினோ விளையாட்டுகள் ஆரம்பமான பின்னர் இந்தியாவிலிருந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்றும் ராஜீவ் மெஹ்ரா கூறியுள்ளார்.