முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்காக பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டின் மீது கற்களை வீச கோனவல சுனிலைப் பயன்படுத்தினார்.

மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச, பாதாள உலகத் தலைவர்களைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவைக் கடத்தி கொலை செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதாள உலக குழு உறுப்பினர்களான ஜூலம்பிடியே அமரே மற்றும் வம்போட்டாவுடன் தொடர்புடையவர்.

ஜூலம்பிடியே அமரே ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்க்காப்பாளராகச் செயல்பட்டார்” என கூறினார்.

Share This