சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை  எள்ளங்குளம்  இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்தார்.

அவரின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தாயக மண்ணில் விதைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் துயிலாலயம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This