இன்று உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

இன்று உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றின் அதிபதியாக விளங்கும் புதன் இன்று மீன ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் ஒரு சில ராசிக்காரர்களின் நிதி ஆதாயங்களை அதிகப்படுத்துகிறது. அவ்வாறு அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம்.

கும்பம்

கும்பத்தின் இரண்டாம் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசியினர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். இழுபறியாக இருந்து வந்த பணம் கைக்கு வரும். பேச்சாற்றலால் பல வேலைகளை முடிப்பீர்கள். இந்த ராஜயோகத்தால் செல்வம் பெருகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுனத்தின் 10 ஆவது வீட்டில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் நல்ல தொழில் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு இலாபம் கிடைக்கும்.

கடகம்

கடகத்தின் 9 ஆவது வீட்டில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெறுவர். முதலீடுகளில் நல்ல இலாபம் கிடைக்கும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். நிதி நன்மைகள் கிடைக்கும்.

Share This