மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று புதன்கிழமை மும்பை விதான் பவனில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் மற்றும் சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்கபட்டார்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This