யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அண்மையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அண்மைய தினங்களாக ரயில்களில் யானைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட பல அரச பல்கலைக்கழகங்களால் அடையாளம் காணப்பட்ட அண்மைய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இதன்போது நடைபெற்றது.
அந்த தொழில்நுட்பத்தை விரைவாக நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய நிறுவனங்களுக்கு தெரிவிப்பதாகும் இந்த கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்திருந்தது.