தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகள்

தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகள்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இதனை பார்வையிட பல்வேறு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகைத் தருக்கின்றனர்.

இந்நிலையில், தாஜ் மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ் மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

சோதனைகளின் போது எதுவும் கண்டறியப்படாத நிலையில் போலியான மிரட்டல் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தோர் குறித்து இந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் அண்மை காலமாக பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது.

CATEGORIES
Share This