நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கும் யூடியூபருக்கும் இடையே வாக்குவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் குழுவினர் மற்றும் யூடியூபர் ஒருவருக்கும் இடையே வாக்குவாத நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகைத் தந்திருந்தார்.
அதன்போது, அங்கு தரித்து இருந்த அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் யூடியூபர் ஒருவருக்கும் இடையே இந்த பதட்ட நிலை உருவாகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் தலையீட்டின் பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாக கூறப்படுகிறது.