தூக்கியெறியும் தேநீர் தூளில் இத்தனை நன்மைகளா?

தூக்கியெறியும் தேநீர் தூளில் இத்தனை நன்மைகளா?

சிறு துரும்பும் பல் குத்த உதவும் எனக் கூறுவதுபோல பெரும்பாலும் நாம் தேவையில்லை என தூக்கியெறியும் பொருட்கள் நன்மைகள் ஏராளம்.

அந்த வகையில் வீடுகளில் தினமும் தேநீர் குடிப்பது வழக்கம். தேநீரை தயாரித்துவிட்டு தேநீர் தூளை குப்பைத் தொட்டியில் போடுவோம். ஆனால், குப்பையில் வீசும் தேநீர் தூளில் எவ்வளவு நன்மைகள் உண்டு தெரியுமா?

ஈக்களை விரட்டும் – வீட்டில் அசைவம் சமைத்தாலோ அல்லது பழங்களை வெட்டி வைத்திருந்தாலோ அந்த இடத்தில் ஈக்கள் மொய்க்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்திய தேநீர் தூளை தூவினால் ஈக்கள் தொல்லை நீங்கும்.

கை கழுவலாம் அசைவம் சாப்பிட்ட பின்னர் என்னதான் சவர்க்காரம் போட்டு கை கழுவினாலும் அந்த வாடை இருந்துகொண்டே இருக்குமு். அவ்வாறான சந்தர்ப்பங்களில் காய்ந்த தேநீர் தூள் கொஞ்சம் எடுத்து கையை நன்றாக ஸ்க்ரப் செய்து கழுவினால் வாடை போய்விடும்.

கரும்புள்ளிகள் நீங்கும் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க, தேநீர் தூளை கொஞ்சம் எடுத்த ஸ்க்ரப் செய்ய வேண்டும். முகம் பளிச்சென்று மாறிவிடும்.

சன் டேன் நீங்கும் – வெளியில் கடும் வெயிலில் சென்று வந்தவுடன் முகம் கண்டிப்பாக டல்லாக இருக்கும். அப்போது ஒரு கரண்டி தேநீர் தூள், புளித்த தயிர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவ வேண்டும். உடனடியாக சன் டேன் நீங்கிவிடும்.

செடிகளுக்கு உரம் – வீட்டில் பூஞ்செடிகள் இருந்தால் அதற்கு தேநீர் தூளை உரமாக போட்டால் செழிப்பாக வளரும்.

Share This