காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேட கடைசி முயற்சி – களமிறங்கிய பிரிட்டன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மலேசியாவின் எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க பிரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.
இது, கடைசி முயற்சியாக இருக்கும் என்று மலோசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடல் இயந்திரவியல் நிறுவனமான ஓஷன்இன்ஃபினிட்டியின் ஆழ்கடல் கலமான அர்மடா 7806, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 1,200 மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலுக்குத் திரும்பியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போயிங் 777-200 ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருக்கலாம் என்று நம்ப்படும் இடங்களில் ஏறக்குறைய 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கடற்படுகையில் தேடும் நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியிருப்பதாக ‘த டெலிகிராப்’ தகவல் தெரிவித்தது.
இங்கிலாந்தின் சவுத்ஹேம்டனில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நீருக்கடியில் பயணிக்கும் தானியக்க வாகனம், மீட்பு வாகனங்களை துணைக்கோள இணைப்பு மூலம் ஓஷன் இன்ஃபினிட்டி இயக்குகிறது.
கடந்த 2014 மார்ச் 8ஆம் திகதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற எம்எச்370 விமானம், 227 பயணிகளுடனும் 12 விமானச் சிப்பந்திகளுடனும் மாயமானது இன்று வரை புரியாத புதிராக உள்ளது.
விமானத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்தியப் பெருங்கடலில் 46,000 சதுர மீட்டர் பரப்பளவில் தேடி மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான மைல்களில் சிதறிக்கிடந்த சிறு துண்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் விமானத்தைத் தேடும் புது முயற்சிக்கு ஆதரவளிக்கப் போவதாக மலேசிய அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து புதிய தேடி மீட்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.
காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேட கடைசி முயற்சி
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மலேசியாவின் எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க பிரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.
இது, கடைசி முயற்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.