சமூக ஊடகத்துறைக்கு விதிக்கப்படும் புதிய வரி – அந்நிய வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம்

சமூக ஊடகத்துறைக்கு விதிக்கப்படும் புதிய வரி – அந்நிய வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம்

வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய வரியின் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சமூக ஊடகத்துறை ஊடாக வருமானத்தை பெறுவோர் 15 வீத வரியை செலுத்த நேரிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தத் தருணத்தில் சமூக ஊடகத்துறைக்கு வரி விதிக்கப்படுவதன் ஊடாக அவர்களின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,

இந்த வரியை கட்டாயம் விதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அரச வருமானத்தை சீர்செய்யும் தேவையுள்ளது. மக்கள் மீது மேலும் மேலும் வரியை விதிக்க முடியாது. ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள வரியை குறைக்கவே அரசாங்கம் முற்படுகிறது.” என்றார்.

சமூக ஊடகத்துறை ஊடாக பாரிய அளவிலான டொலர் வருமானத்தை இலங்கையின் இளைய தலைமுறையினர் ஈட்டி வருகின்றனர்.

குறிப்பாக பேஸ்புக், யூடியூப், பைபர் உட்பட பல்வேறு சமூக இணையங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக டொலர் வருமானத்தை இளைய தலைமுறையினர் இலங்கைக்கு ஈட்டிக்கொடுத்துவரும் பின்புலத்தில் அவர்கள் மீது 15 வீத வரிவிதிப்பு என்பது குறித்த தொழிலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த வழிவகுக்கலாம் என்ற எச்சரிக்கையை பொருளாதார நிபுணர்கள் விடுத்துள்ளனர்.

இளைய தலைமுறையினர் ஈட்டும் டொலர் வருமானமானது அந்நிய செலாவணியில் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. வாகன இறக்குமதி்க்கான அனுமதி, ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி என இலங்கையின் பொருளாதார மீள சர்வதேச சந்தைக்கு திறந்துவிடப்பட்டிருக்ககும் இத்தருணத்தில் சமூக ஊடகத்துறைக்கு வரிவிதிப்பது குறித்து அரசாங்கம் மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Share This