ஆபிரிக்காவின் கொங்கோ குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் – 53 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் அண்மைக் காலமாக மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரிலேயே இந் நோய்த் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஒரு மாத காலத்துக்குள் சுமார் 420 பேருக்கு இக் காய்ச்சல் பரவியுள்ளது. அவர்களுள் சிகிச்சை பலனளிக்காமல் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க இந் நோய் குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.