குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இந்திய பெண்

குஷ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!
பனிரெண்டு மில்லியன் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித் பெண் இன்று புதன்கிழமை (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்திலிருந்து ஹொங்கொங் வழியாக குறித்த பெண் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள இந்தப் பெண் 38 வயதுடைய இந்தியப் பெண் என தெரியவந்துள்ளது.
குஷ் போதைப்பொருளை குறித்த பெண், தனது பயணப்பையில் உணவு பொதியொன்றில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
சந்தேகநபரும் மீட்கப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.