காலையில் எழுந்தவுடன் இந்த விஷயங்களை பார்த்தால் நல்லது நடக்குமாம்

காலையில் எழுந்தவுடன் இந்த விஷயங்களை பார்த்தால் நல்லது நடக்குமாம்

ஒரு நாள் நேர்மறையாக அமைய வேண்டும் என்றால் அது நாம் எழுந்து பார்க்கும் விடயங்களை பொறுத்து உள்ளது. காலையில் எழுந்தவுடன் நாம் பார்க்கும் சில விடயங்கள் நம்மை நாள் முழுவதும் நேர்மறையாக வைத்திருக்கும்.

அதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

கண்ணாடி – காலையில் எழுந்தவுடன் சிரித்த முகத்துடன் கண்ணாடியைப் பார்த்தால் அது நேர்மறை எண்ணத்தைக் கொடுக்கும். காரணம் கண்ணாடி என்பது நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதைத் திருப்பி வெளிப்படுத்தும்.

வானம் – காலையில் எழுந்தவுடன் மேக மூட்டத்துடன் இருக்கும் வானத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும்.

பசு – காலையில் பசு மற்றும் கன்றுக்குட்டியை ஒன்றாக பார்ப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனக் கூறப்படுகிறது.

உள்ளங்கை – காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கையை நாம் பார்ப்பது வெற்றி மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

சூரிய உதயம் – அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து, சூரியனைப் பார்ப்பது நமக்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும்.

கோயில் கோபுரம் – காலையில் எழுந்தவுடன் கோயில் கோபுரத்தை தரிசிப்பது மன நிறைவைத் தரும்.

Share This