பட்டிக்காடா? பட்டணமா? சபாஷ் சரியான போட்டி

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் பட்டிக்காடா? பட்டணமா? சுற்று.
இதில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து பாடல்களை பாடவுள்ளனர்.
மேலும் நடுவர்களில் இமான் பட்டிக்காட்டுக்கும் மனோ பட்டணத்துக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக பாடகர்கள் சுனிதா சாரதியும் சின்னபொண்ணும் கலந்துகொள்கின்றனர்.
மேலும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்ற ராமர் மற்றும் மதுரை முத்துவும் கலந்துகொள்கின்றனர்.