வடக்கில் ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ – ஆளுநர் வேதநாயகன் உத்தரவு

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் கொள்கை வரைவை முன்வைத்து அது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (25.02.2025) இடம்பெற்றது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களினதும் செயலாளர்கள் ஆகியோரும், இந்த வரைவு ஆவணத்தை உருவாக்கிய நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் ஐ.எல்.ஓ. நிறுவனப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் நேரடியாகப் பங்கேற்றதுடன், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர் சார்பான பிரதிநிதிகள் ‘சூம்’ வழியாக இணைந்து கொண்டனர்.
இந்த வரைவு ஆவணம் இறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தெரிவித்தார்.