வியாழக்கிழமை கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

வியாழக்கிழமை கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் உள்ளூராட்சி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜூன் மாதம் 2ஆம் திகதி உள்ளூராட்சி கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This