வறண்ட வானிலையால் மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக விளைச்சல் குறைந்துள்ளதாகவும் தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மலையகத்தில் மரக்கறி விளைச்சலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நீர்வழிகளில் நீர் ஓட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் தெரிவித்தார்.
இதன்காரணமாக, கரட், லீக்ஸ் , கோவா போன்ற மரக்கறிகளின் விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்நில காய்கறி விளைச்சல்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தாழ்நில விளைச்சலைப் பொறுத்தவரை தக்காளி, மிளகாய், முள்ளங்கி மற்றும் பூசணி சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இடைத்தரகர்கள் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.