பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்திலிருந்து எரிசக்தி விலை உயர்வு

பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்திலிருந்து எரிசக்தி விலை உயர்வு

எரிவாயு மற்றும் மின்சார சந்தைகள் அலுவலகத்தின் புதிய உச்சவரம்பின் கீழ், பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்நாட்டு எரிசக்தி விலைகள் 6.4 வீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மக்களின் நிதியில் எதிர்பார்த்ததை விட பாரிய அழுத்தத்தை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, வழமையான அளவு எரிவாயு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தின் வருடாந்திர கொடுப்பனவு பட்டியல் ஆண்டுக்கு 111 பவுண்ட்ஸ் அல்லது ஒரு மாதத்திற்கு 9.25 பவுண்ட்ஸ் அதிகரிக்கும்.

இது , மொத்த கொடுப்பனவு பட்டியல் ஆண்டுக்கு 1,849 பவுண்ட்ஸாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள 26 மில்லியன் வீடுகளின் பட்டியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் மொத்த செலவுகள் சமீபத்திய விலை உயர்வுக்குப் பின்னால் உள்ளன, இது காலாண்டு உச்சவரம்பில் தொடர்ந்து மூன்றாவது அதிகரிப்பு ஆகும்.

எரிவாயு மற்றும் மின்சார சந்தைகள் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு முன்னதாக விலைகளில் ஐந்து வீத உயர்வு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This