கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பெண் இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டிலிருந்து வெளியேற கூடும் என சந்தேகிக்கப்படும் அனைத்து இடங்களிலும் தற்போது விசேட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இல 05 நீதிமன்றத்தினுள் பாதாள உலகக் குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபருக்கு நீர்கொழும்பு, கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் துப்பாக்கியை வழங்கியிருந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து இஷாரா தலைமறைவாகியுள்ளார்.அவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று காலை இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயார் மற்றும் சகோதரன் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.