சஜித் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியா?

சஜித் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியா?

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டுவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை கைவிட்டு கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.

சஜித் பிரேமதாச கூட்டணியில் ஆர்வம் காட்டவில்லை போல் தெரிகிறது.” எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சஜித் பிரேமதாச ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

 

Share This