மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை

நாட்டில் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்
மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பதில் தெளிவாகவுள்ளார்.
நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலையின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை.
தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கு நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இது குறித்து மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.” என தெரிவித்தார்