வரவு செலவுத் திட்டம் – இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை (25) மாலை 6:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பித்தது.
அதன்படி, விவாதம் ஏழு நாட்கள் நீடித்தது.
வரவு செலவுத் திட்டக் குழு நிலை விவாதங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இவ்வாண்டுக்கான அரசு செலவினங்களுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.