வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கணுமா? அப்போ பூஜை அறையில் இதை பண்ணுங்க

வீடுகளில் பூஜையறை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், கடவுளுக்கு என்னென்ன படைக்க வேண்டும், எப்படி படைக்க வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம். அதுகுறித்து இப் பதிவில் பார்ப்போம்.
கடவுளுக்கு வெற்றிலை, வாழைப்பழம் போன்றவற்றை வைத்து படைக்கும்போது வெற்றிலைக்கு நுனியும் வாழைப்பழத்துக்கு காம்பும் இருப்பது அவசியம்.
ஆனால், வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியிருக்கக்கூடாது. சாதம் படைக்கும்போது அது பச்சரிசியில் செய்த சாதமாகத்தான் இருக்க வேண்டும்.
கடலை, அவல், பொரி, கல்கண்டு போன்றவற்றை படைக்கலாம். கடவுளுக்கு தேங்காய் வைக்கும்போது, முதலில் தேங்காயை சீராக உடைத்து, பின்னர் தான் குடுமியை பிரிக்க வேண்டும்.
எக் காரணத்துக்காகவும் அழுகிய தேங்காய், கோணல் தேங்காய், வழுக்கைத் தேங்காயைப் பயன்படுத்தக் கூடாது. மரப்பலகை, பித்தளைத் தட்டில் விளக்கு வைப்பது நல்லது. கடவுளை வழிபடுவதற்கு முன்பு சாம்பிராணி போட வேண்டும்.
பூஜையறையில் கோலம் போட்டு சிலைகளை சரியாக வைத்து விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி அர்ச்சனை செய்த பின்னர்தான் கடவுளுக்கு ஆரத்தி காட்ட வேண்டும். இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றி பூஜை செய்ய வேண்டும். அப்போதுதான் முழுப் பலன் கிடைக்கும்.