மறைந்த ஹிஸ்புல்லா தலைவருக்கு இன்று இறுதி அஞ்சலி

லெபான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 04 மாதங்களுக்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை
அவரது இறுதிக் கிரியையகள் (23) நடைபெறுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக தாமதமான பொது இறுதிச் சடங்கு பெய்ரூட்டின் கேமில் சாமூன் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மற்றும் ஆர்வலர்கள் தவிர 65 நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 பிரமுகர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என ஹிஸ்புல்லா அதிகாரி அலி தாமோஷ் தெரிவித்துள்ளார்.