போப் அமைதியான இரவைக் கழித்தார் – வத்திகான் அறிவிப்பு

போப் அமைதியான இரவைக் கழித்தார் – வத்திகான் அறிவிப்பு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல் தொடர்ந்து “மோசமாக” இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சனிக்கிழமை இரவை “அமைதியாகக் கழிந்தார்” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையை விட போப்பாண்டவர் ” உடல்நிலை சரியில்லாமல்” இருப்பதாகவும், அவருக்கு இரத்தமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வத்திகான் அறிவித்துள்ளது.

88 வயதான அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்திசாலையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இரத்த சோகையுடன் தொடர்புடைய குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை காரணமாக இரத்தமாற்றம் அவசியம் என்று கருதப்பட்டது என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் விழிப்புடன் இருந்தார், அவர் நாற்காலியில் இருந்தார், ஆனால் “அதிக ஒக்ஸிஜன் ஓட்டம்” தேவைப்பட்டது, என்று வத்திகான் தெரிவிக்த்துள்ளது.

எவ்வாறாயினும், “பரிசுத்த திருத்தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும்”, “போப் ஆபத்தில் இல்லை.” என்றும் வத்திகான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 

Share This