புலிகள் உட்பட 15 அமைப்புகளை தடை பட்டியலில் நீடித்த இலங்கை

விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டாவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புகள் அமைப்புகள் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மீண்டும் நிதி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அந்த அமைப்புகளின் நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
15 தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் வருமாறு,
தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் இளைஞர் அமைப்பு, எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக்குழு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு, விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம், சேவ் த பேர்ள்ஸ் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.