24ஆம் திகதியின் பின் மழையுடனான காலநிலை

24ஆம் திகதியின் பின் மழையுடனான காலநிலை

நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அல்லது இரவில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

Share This