‘அஃகேனம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

உதய் கே இயக்கத்தில் ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ள திரைப்படம் அஃகேனம்.
இப் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மெல்லாலி மெல்லாலியே எனத் தொடங்கும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.