பல மாவட்டங்களில் வெப்பநிலை அவதானமான மட்டத்தில்

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய நிலையை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறு, நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமையில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்கள் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளது.