நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க புதிய குழு

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க புதிய குழு

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு குழு ஒன்றை நியமிப்பதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நேற்று (20) நடைபெற்ற பெப்ரவரி மாதத்திற்கான நுவரெலியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுகளும் இங்கு நடத்தப்பட்டன, மேலும் விவசாயக் குழுவுக்கு கிடைக்கப் பெற்ற கடிதங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share This