AI தொழில்நுட்பத்தில் போலி புகைப்படங்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
வேனில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் சில முக்கிய ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் அவர் நிதானமான மனநிலையில் இருப்பதையும் பாதுகாப்புப் பணியாளர்களால் நட்புடன் நடத்தப்படுவதையும் காட்டுகிறது.
என்றாலும் அந்த புகைப்படங்கள் அனைத்து உண்மையானவை அல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன. AI குறித்து எம்.பிக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.