நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இன்று ரிலீஸ்….தனுஷ் போட்ட முதல் பதிவு

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரயர் போன்றோர் நடித்துள்ளனர்.
இளைஞர்களின் காதல், திருமணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத் திரைப்டபம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநரான தனுஷ் அவரது எக்ஸ் தளத்தில், “காதல், சிரிப்பு, நட்பை கொண்டாட வாருங்கள்…இன்று முதல்…ஓம் நமச்சிவாய….”என்று பதிவிட்டுள்ளார்.