பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று விசேட அறிக்கை

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.