உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது

உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது

நமது வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிரம்பி வழிய வேண்டும் என்றால் சில விடயங்களை செய்தாக வேண்டும். அதாவது, வீட்டில் இருக்கும் சில பொருட்களை முழுமையாக காலியாக விடாமல் இருந்தாலே நமது வீட்டில் செல்வம் நிரம்பி வழியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பணப் பை

நீங்கள் உபயோகிக்கும் பணப் பையில் ஆகக் குறைந்தது ஒன்றிரண்டு பணத் தாள்களாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்கள் பணப் பையிலிருக்கும் பணத்தை முழுமையாக செலவழித்து விடுவதைத் தவிர்க்கவும். இது தவிர உங்கள் பணப் பையில் சங்கு, கோமதி சக்கரம் போன்றவற்றைக் கூட வைக்கலாம்.

அரிசி

அரிசி என்பது மிகவும் முக்கியமான ஒரு பொருள். உங்கள் வீட்டில் என்றுமே அரிசி பாத்திரம் காலியாகிவிடக் கூடாது. அது முழுமையாக காலியாவதற்கு முன்பு அரிசி வாங்கி நிரப்பிவிட வேண்டும். அரிசி காலியானால் செல்வ நிலை குறையும் என கூறப்படுகிறது.

தண்ணீர் பானை

பூஜை அறையில் வைத்திருக்கும் தண்ணீர் பாத்திரம் எப்பொழுதும் நிரம்பியே இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

காலியான வாளி

குளியலறையில் நீங்கள் வைத்திருக்கும் வாளியில் ஒருபோதும் நீர் காலியாகக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும். இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும்.

Share This