எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி

எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமும் கடந்த காலங்களில் இதனையே செய்து வந்ததாக அவர் குற்றம் சுமத்தினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்களை அவமதிப்பதோ அல்லது அவற்றை இல்லாமல் செய்வதோ தமது நோக்கம் இல்லை. அரசாங்கத்தின் நற்செயற்பாடுகளுக்கு எப்போதும் ஆதரவளிப்பேன்.” எனவும் தெரிவித்தார்.