இருண்ட இந்தோனேசியா – நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்

இருண்ட இந்தோனேசியா –  நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் பின்னர், முக்கிய நகரமான யோககர்த்தாவில் சுமார் ஆயிரம் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் கருப்பு உடையில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தா மற்றும் சுமத்ரா தீவில் உள்ள மேடன் உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டங்கள்  இம்பெற்றன.

ஜனாதிபதியின் இந்த கொள்கைகள் சமூக ஆதரவு அமைப்புகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

செலவுக் குறைப்பு நடவடிக்கை மக்கள் சார்புடையவை அல்ல என தெரிவித்து இருண்ட இந்தோனேசியா எனும் தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share This