கடந்த வருடம் 180,000 நாய் கடி சம்பவங்கள் பதிவு

கடந்த வருடம் 184,926 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
நாய் கடிக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் 850 முதல் 1,000 மில்லியன் ரூபா வரை செலவிட்டுள்ளது.
கடந்த வருடம் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.