கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உடந்தையாக இருந்த பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591727
- பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள்
- பெயர் – சிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
- வயது – 25 வயது
- தே.அ.அ.இல- 995892480V
- முகவரி – 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம
இதேவேளை, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பெற்றுக்கொள்ள இதுவரையில் உறவினர்கள் எவரும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.