இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்

இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் வறட்சியான காலநிலை நிலவி வருகிறது .

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Share This