சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த கோரிக்கை

சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த கோரிக்கை

நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரும் சட்டத்தரணிகள் சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை எனவும் , நீதிமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு சட்டத்தரணியையும் சோதனைக்குட்படுத்த உதவுமாறு சட்டத்தரணிகள் சங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (19) காலை கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் சந்தரப்பத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, நீதிமன்றங்களுக்குள்ளும் ஆயுதமேந்திய அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்வதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Share This