‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?

கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது.
இதில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இப் படம் எதிர்வரும் ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.