இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா

பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், விரி விகிதம் காரணமாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அண்மையில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
மேலும், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் துவக்கி உள்ளது.
இதன்படி 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ‘லிங்க்ட் இன்’ சமூக வலைதளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டில்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.