பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக கொழும்பில் போராட்டம்

பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (18) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டுவர்கள் வலியுறுத்தினர்.
அமெரிக்கா இனி இஸ்ரேலை ஆதரிக்கக் கூடாது. மனிதாபிமான துயரம் மேலும் நீடிக்கக் கூடாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திடம் ஒப்படைத்தனர்.