பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய இவ்வாறு பாணின் விலையை குறைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையையும் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து அமுலாகும் விதத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்க பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று (17) தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.