மோதிரம் அணிவதற்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

வெறும் அழகுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் தான் மோதிரம் அணிகிறோம் என ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வெவ்வேறு விரல்களில் மோதிரம் அணிவதற்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு.
அதன்படி, கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். இது தன்னம்பிக்கையை அதிகரித்து புதிய ஆரம்பத்துக்கான உத்வேகத்தைக் கொடுக்கும்.
ஆள்காட்டி விரலில் அணியப்படும் மோதிரம், ஆளுமைத் திறனை அதிகரிப்பதோடு, நம்பிக்கையும் ஏற்படுத்தும்.
அதேபோல் நடுவிரலில் மோதிரம் அணிந்தால் சனி தோஷம் நீங்குவதோடு, வாழ்வில் ஒரு வித பிடிப்பு ஏற்படும்.
மோதிர விரலில் அணியப்படும் மோதிரம் பெரும்பாலும் திருமண மோதிரம். இது காதல், அழகு, செல்வத்தைக் குறிக்கிறது.
சுண்டு விரலில் அணியப்படும் மோதிரம் புத்திசாலித்தனம், தொடர் திறன், வணிகத் திறனை அதிகரிக்கும்.
பெரும்பாலும் இடது கை மோதிர விரலில் அணியப்படும் திருமண மோதிரம் நேரடியாக இதயத்துடன் இணைவதாக கூறப்படுகிறது.