உப்பின் மகத்துவம் தெரியுமா? இப்படி செய்தால் கெட்ட சக்தி நெருங்காது

கல் உப்பு எப்பொழுதும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய கல் உப்பை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
வாஸ்துவின் அடிப்படையில் சமையல் அறை வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் அமைய வேண்டும். அதேபோல் கல் உப்பை வீட்டின் கிழக்கு அல்லது தெற்கு திசையில் தான் வைக்க வேண்டும்.
அதேபோல் கல் உப்பை ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கக் கூடாது. மண் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில்தான் வைக்க வேண்டும்.
கல் உப்பை எப்பொழுதம் அடுப்புக்கு கீழே குனிந்து எடுப்பதுபேல் தான் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் செளபாக்கியம் கிடைக்கும்.
தரையைத் துடைக்கும்போது அந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போடடு துடைத்தால் எதிர்மறை விடயங்கள் ஓடிவிடும்.
குளிக்கும்போது ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு குளித்தால் கண் திருஷ்டி நீங்கும்.
அதேபோல் வீட்டின் நிலைவாசலில் சிவப்பு துணியொன்றில் கல் உப்பை வைத்து கட்டி வைத்தால் பில்லி, சூனியம், கெட்ட சக்திகள் நம்மை அண்டாது.