ரூபாய் 100 கோடி வசூல் சாதனை செய்த தண்டேல் திரைப்படம்

சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இப் படத்தில் நாக சைத்தன்யா மீனவராக நடிப்பதோடு, அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்படுவதாகவும் இதற்கிடையில் அவருக்கும் சாய் பல்லவிக்கும் இடையிலான காதல் பற்றியும் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் உலகளாவிய ரீதியில் இதுவரையில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்குது.